ஏஆர் ரகுமான் பாடலுக்கு ஆட்டம் போட்ட பிடிஎஸ் குழு: வீடியோ வைரல்!

ஏஆர்.ரகுமான் இசையில் லகான் திரைப்படத்தில் இடம்பெற்ற ராதா கைசே நா ஜலே என்ற இந்தி பாடலுக்கு பிடிஎஸ் இசைக்குழு நடனம் ஆடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்கொரியாவை சேர்ந்த பிடிஎஸ்…

ஏஆர்.ரகுமான் இசையில் லகான் திரைப்படத்தில் இடம்பெற்ற ராதா கைசே நா ஜலே என்ற இந்தி பாடலுக்கு பிடிஎஸ் இசைக்குழு நடனம் ஆடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தென்கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழு உலகப்புகழ்பெற்றது. சமூக பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள அவர்களின் ஆல்பம் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானது. அண்மையில் பிடிஎஸ் இசைக்குழு பத்தாம் ஆண்டு விழாவை கொண்டாடியது. 2 கூல் 4 ஸ்கூல்’விங்ஸ் உள்ளிட்ட பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஏஆர்.ரகுமான் இசையில் லகான் திரைப்படத்தில் இடம்பெற்ற ராதா கைசே நா ஜலே என்ற இந்தி பாடலுக்கு பிடிஎஸ் இசைக்குழு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
பாடலுக்கு ஏற்றவாறு பிடிஎஸ் இசைக்குழு நடனம் ஆடுவது  போல் மிக பொருத்தமாக வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பார்த்து லைக்குகளை அளித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.