இந்திய அணி வீரர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றிக் கறிக்கு தடையா? பிசிசிஐ விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் உணவு பட்டியலில் அசைவ உணவான பீஃப், மற்றும் பன்றிக் கறி இடம் பெறக்கூடாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று பிசிசிஐ-யின் பொருளாளர் அருண் தூமல்…

இந்திய கிரிக்கெட் அணியின் உணவு பட்டியலில் அசைவ உணவான பீஃப், மற்றும் பன்றிக் கறி இடம் பெறக்கூடாது என்று பிசிசிஐ அறிவித்துள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று பிசிசிஐ-யின் பொருளாளர் அருண் தூமல் தெரிவித்துள்ளார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டதாகவும் அதில் பீஃப், பன்றி கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் ஹலால் வகை இறைச்சி உணவுக்கு மட்டும் அனுமதி என்று வலியுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இது சமூக வலைதளத்தில், வைரலானதைத்தொடர்ந்து பிசிசிஐக்கு எதிராக இணையவாசிகள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் இத்தகவலை பிசிசிஐ-யின் பொருளாளர் அருண் தூமல் மறுத்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் அவர்களுக்கு விருப்பமான உணவை சாப்பிடலாம் எனவும் உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ வீர்ர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு விதித்ததாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.