பக்ரீத் பண்டிகையையொட்டி இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் இருநாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
BSF, Pakistan Rangers exchange sweets at Attari-Wagah border on occasion of Eid Al-Adha
Read @ANI Story | https://t.co/1Ylk8ReYcT#BSF #PakistanRangers #AttariWagahBorder #EidAlAdha pic.twitter.com/xdHv4Mjyl8
— ANI Digital (@ani_digital) July 10, 2022
ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை, ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு பண்டிகையின் போது இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது நடந்து வருகிறது.
அதன்படி இன்று இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான வாகா எல்லையில இந்திய-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறி தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.







