பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை இன்றைய தினம்
கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின்
முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும்பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம். பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். காலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் தன் அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.
https://twitter.com/narendramodi/status/1545965565843365888
பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.







