பூப்பந்தாட்ட போட்டி – தமிழ்நாடு அணி வெற்றி

திருவொற்றியூரில் நடைபெற்ற தென்மண்டல பூப்பந்தாட்ட போட்டியில், கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.   திருவொற்றியூரில், முதல் முறையாக 43 வது தென் மண்டல பூப்பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாட்களுக்கு…

திருவொற்றியூரில் நடைபெற்ற தென்மண்டல பூப்பந்தாட்ட போட்டியில், கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

 

திருவொற்றியூரில், முதல் முறையாக 43 வது தென் மண்டல பூப்பந்தாட்ட போட்டிகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் மற்றும் அகில இந்திய பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பாக, 43-வது தென் மண்டல தேசிய பூப்பந்தாட்ட பட்டய போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான இன்று இளைஞர் நலம் விளையாட்டு துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்கள் கே பி சங்கர், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி போட்டியின் போது நடைபெற்ற விளையாட்டை பார்வையிட்டனர்.

 

தொடர்ந்து மூன்று நாட்களாக ஒவ்வொரு சுற்றுகளாக நடைபெற்று வந்த பூப்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கர்நாடக அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. பின்னர் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணிக்கு அமைச்சர் மெய்யநாதன் பரிசு வழங்கி பாராட்டினார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.