ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்கும் ‘அயலான்’…!

‘அயலான்’ திரைப்படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5…

‘அயலான்’ திரைப்படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்போது ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அயலான் படத்தின் டிரைலர் ஜனவரி 5 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயலான் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமை 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் படங்களுக்கு இவ்வளவு பெரிய வியாபாரம் நடந்ததில்லை என சொல்லப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.