8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. டிசம்பர் தொடக்கத்தில் உருவான மிக்ஜாம் புயலாலும், தொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையாலும் பல பாதிப்புகள் ஏற்பட்டன.

அதன்பின்னர் அதை தொடர்ந்து கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. பல பகுதிகளிலும் மிதமான அளவிலேயே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.