சென்னை பெருநகர காவல்துறை சார்பில் போலி செய்திகள் குறித்துவிழிப்புணர்வு காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள்
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக சமூக வலைதளம் மூலம் போலி செய்திகள் குறித்த விழிப்புணர்வு காணொலிகளை பதிவிட்டு அதனை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
அவள் திட்டம்(avoid violence through awareness and learning) தொடங்கிய நாள் முதல் சமூக வலைதளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் சென்னை பெருநகர காவல் துறை ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : மழை வெள்ளத்தால் #AndhraPradesh -ல் 10 பேர் உயிரிழப்பு! ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
இந்நிலையில் போலி செய்திகள் குறித்து ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்த பின்னரே பகிர வேண்டும். உண்மை தன்மையில்லாத செய்திகளை தேவையில்லாமல் பரப்ப கூடாது என பொதுமக்களுக்கு புரியும் வகையில் காணொலி ஒன்றை பதிவிட்டு பொதுமக்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.







