“விழியும் விழியும் தீண்டும் நேரம்” – ராஷ்மிகா மந்தனாவின் #TheGirlfriend படத்தின் டீசர் வெளியானது!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்துள்ள ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் கடந்த…

"Awake and touch is the time" - The teaser of Rashmika Mandanna's #TheGirlfriend is out!

ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘தி கேர்ள் பிரண்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்துள்ள ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் புஷ்பா படத்தில் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் இதுவரை ரூ.621க்கு மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ராஷ்மிகா மந்தனா புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘தி கேர்ள் பிரண்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “தமிழ்நாட்டில் 71,145 மின்மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன” – அமைச்சர் #SenthilBalaji தகவல்

இந்த படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்த படம் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், ராஷ்மிகாவின் முதல் தோற்றம் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் தமிழ் டீசர் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.