உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மேலும் பல சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமிகள் அதிகளவில் வலைதளங்களை பயன்படுத்துவதால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகளின் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனை மீறி சமூக வலைதளங்களில் சிறுவர்- சிறுமிகள் கணக்கு வைத்திருந்தால் அதனை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
டிக்-டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதள நிறுவனங்கள் சிறுவர், சிறுமிகளின் கணக்குகளை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதனை மீறினால் அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.







