ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு ஆல்அவுட்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ்வென்ற இந்திய…

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ்வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சால் இந்திய அணி 109 ரன்களில் ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாகவே ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 60 ரன்கள் எடுத்தார்.

லபுசேங், ஸ்மித் போன்ற பேட்ஸ்மென்களும் சற்று நிதானமாக ஆடினர். முதல் நாள் ஆட்டம் முடிவில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டம் தொடக்கத்தில் அந்த அணி சிறப்பாகவே ஆடியது. ஆனால் ஒருகட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து திணறியது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணித்தரப்பில் ஜடேஜா 4, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் அந்த அணி இந்தியாவை விட 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.