கிறிஸ்துமஸை முன்னிட்டு புதன்கிழமையன்று மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் (டிச.25) கொண்டாடப்பட உள்ளது. அன்று பொது விடுமுறை என்பதால், சென்னையில் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்படும்.
அதேபோல் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் ஞாயிறு ஷிப்ட் அடிப்படையில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளது.







