முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு… நம்பர் பிளேட் தவறாக இருந்தால் அபராதம்!

சென்னையில் நம்பர் பிளேட் சரியாக இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சராட்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியுள்ளதாவது: சென்னை போக்குவரத்து காவல் துறை சமூக வலைதளத்தின் மூலம் போக்குவரத்து மேம்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பெரும் பங்கு வகிக்கிறது. சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கம் (@ChennalTraffic) சாலைப் பயனாளர்களுக்கு மிகவும் பரிச்சயமாக கையாளப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், 10,400 ட்வீட்களுடன் 69,162 பின்தொடர்கின்றனர். கடந்த 2 மாதங்களில் ட்விட்டர் மூலம் 1267 விதிமீறல்கள் GCTP-யின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதில் 90.5% புகார்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதேபோல், Facebook (Greater Chennai Traffic Police) 1,01,734 பின்தொடர்பவர்களையும், Instagram (chennaitrafficpolice) 1,444 இடுகைகளுடன் 5,256 பின்தொடர்கின்றனர். பொதுமக்கள் சமூக ஊடகங்களில் கூறப்பட்ட குறைகளைக் கையாளுவதில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. 90031-30103 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலம் பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

கடந்த சில நாட்களாக வாகனங்களின் நம்பர் பிளேட் சரியாக இல்லாததால் எச்சரிக்கை
விடுக்கப்பட்டு 43 ஆயிரம் வாகன உரிமையாளர்களின் நம்பர் பிளேட் சரியாக
மாற்றப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள முக்கிய வாகனம் நிறுத்தும் இடங்கள், சிக்னல்களில் நம்பர் பிளேட் சரியாக இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கடந்த மூன்று நாட்களில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாத 15,000
க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 49 லட்ச ரூபாய்
அபராதம் வசூல் செய்யப்பட்டதாகவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது
அபராதம் தொடர்ந்து வசூலித்து வருவதாகவும், அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

லாட்டரி வாங்கி ரூ. 62 லட்சத்தை இழந்த வியாபாரி உயிரிழப்பு

Halley Karthik

ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு

Web Editor

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முறையில் மாற்றமில்லை

Halley Karthik