முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவர முயற்சி-முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாட்டில் ஒற்றை ஆட்சி முறையை கொன்டுவர முயற்சி நடப்பதாக -முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டினார்.

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நான் சில நாட்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததால் என்னால் நேரில் வர இயலவில்லை.

ஆனால் இம்மாநாட்டை திருப்பூரில் நடத்துவதாக முத்தரசன் கூறியபோது மகிழ்ந்தேன் .

நல்லக்கண்ணு அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்க அறிவித்திருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது . இயக்கமே வாழ்வென அர்ப்பணித்தவர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி நான் முறைப்படி அந்த விருதை வழங்க இருக்கிறேன். விருது வழங்குவது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

காந்தியும் ஜீவாவும் சந்தித்த ஊரில் நினைவு மண்டபம் அமைக்க சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் வைத்த கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என இம்மாநாட்டில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய நாட்டிற்கு 2 அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. சமூக நல்லிணக்கம் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான அனுகுமுறை தான் அவை. அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், அனைத்து மொழிகளையும் ஒன்றாக பாருங்கள். அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றாக மதியுங்கள் என நாம் கேட்பதால் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள் .

இவை இடதுசாரிகள் மட்டுமல்ல இந்தியாவே கேட்க வேண்டும். முதல்வராக நான் நானாக அமர்ந்துவிடவில்லை, தோழமைக் கட்சிகளால் முதல்வராகியுள்ளேன். நாணயத்திற்கு இரு பக்கம் போல வளர்ச்சி திட்டமும், சமுக மேம்பாடும் அவசியம். அதுவே திராவிட மாடல்.

ஆட்சியை குறை கூற இயலாததால் அவதூறு பரப்புகிறார்கள். திராவிட மாடல் தமிழகத்திற்கும் மட்டுமல்ல இந்தியா முழுவதிற்கும், 75 வது ஆண்டு கொண்டாட்டமாக மட்டுமல்லாது இந்தியாவை செம்மைபடுத்திட உறுதியேற்க வேண்டும்.

இந்தியாவை காப்பாற்ற இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும், வளர்ச்சியடைய செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி உயர்த்திவிட்டு மாநில அரசு மீது பழி போடுகிறார் மத்திய நிதியமைச்சர்.

கல்வியை பள்ளிக்கூடத்தை தாண்டாத வகையில் உரிமையை பறிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் கொடுத்தால் நீக்கம் செய்கிறார்கள். ஒற்றை ஆட்சி முறையை கொண்டுவருகிறார்கள். இதுதேர்தல் கூட்டணி அல்ல கொள்கை கூட்டணி, ஒற்றை ஆட்சியை எதிர்த்து ஒரணியில் அணிதிரண்டு எதிர்கொள்வோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு

Web Editor

முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்

Halley Karthik

மின்சாரம் தாக்கி விவசாய கூலி தொழிலாளி பலி

EZHILARASAN D