16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ந்தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று பதவியேற்றது. இதனைத் தொடர்ந்து புதிய அரசு பங்கேற்கும் முதல் கூட்டத்தொடர், வரும் 11ம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தொடரில், உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் சான்றிதழை கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.







