இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி நாளை மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பின் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கி விளையாடுகிறார் ஜாஸ்பிரித் பும்ரா. அதே போல காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் கே எல் ராகுல் நாளைய போட்டியில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முதல் இன்னிங்ஸிலேயே ரத்து செய்யப்பட்டு தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளைய போட்டியில் மழை குறுக்கிட்டால், நாளை மறுநாள் எங்கு நிறுத்தப்பட்டதோ, அதே இடத்தில் இருந்து போட்டி அடுத்த நாள் மீண்டும் தொடங்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.







