ஆசிய கோப்பை: அக்சர் படேல் காயம்… இந்திய அணியுடன் இணையும் தமிழக ஆல்ரவுண்டர்…!

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்…

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக விளையாடவுள்ள வீரரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்4 சுற்றில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டு இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 , தௌஹித் ரிடோய் 54 , நசும் அகமது 44 ரன்கள் சேர்த்தனர். இந்தியா சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டும், முகமது ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆட்டக்காரர் சுப்மன் கில் சதமடித்த நிலையில், மறு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. திலக் வர்மா 5, இஷான் கிஷன், 5 கே.எல்.ராகுல் 19, சூர்யகுமார் யாதவ் 26, ஜடேஜா 7 ரன்கன் சேர்த்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்க தேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து சூப்பா் 4 சுற்றில் ஆறுதல் வெற்றியுடன் போட்டியிலிருந்து வங்கதேச அணி வெளியேறியது. இந்தப் போட்டியின்போது அக்‌ஷர் படேலுக்கு தொடைப்பகுதியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் பேட்டிங்கின்போது அவர் சிரமத்துடன் விளையாடியதை பார்க்க முடிந்தது. அவர் ஆட்டமிழக்காமல் இருந்தால் இந்தியா நிச்சயம் வென்றிருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில் காயம் காரணமாக அசிய கோப்பை போட்டிகளில் இருந்து அக்‌ஷர் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் உள்ளதால் வாஷிங்டன் சுந்தர் நிச்சயமாக அணியில் இருப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மதியம் 3 மணிக்கு இந்தியா இலங்கை அணிகள் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பலப் பரீட்சை செய்ய உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.