ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
நியூசிலாந்து அணிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் நியூசிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் ஐக்கிய அரபு அமீரகம் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியதை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் (எக்ஸ்) பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/ashwinravi99/status/1693115922960228836
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: நியூசிலாந்து அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியது மிகப் பெரிய சாதனை. உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது மற்ற போட்டிகளில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் காட்டியுள்ளது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த வெற்றி உந்துதலாக இருக்கும்.
எதிர்காலத்தில் மற்ற நாடுகள் ஐபிஎல்லில் பிரதிநிதித்துவம் பெறுவதையும், அந்தந்த நாடுகளில் விளையாட்டின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதையும் பார்க்கக்கூடும்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.







