என்சிபி சாட்சி கிரண் கோசாவி கைது

என்சிபி சாட்சியாக கிரண் கோசாவி சரனடைந்தார், ‘பாலிவுட்’ நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால்…

என்சிபி சாட்சியாக கிரண் கோசாவி சரனடைந்தார், ‘பாலிவுட்’ நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், ஆர்யன்கான் கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிக்க 28 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இறுதி இந்த பேரம் 18 கோடியில் முடிக்கப்பட்டதாகவும் இதில் 8 கோடி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வான்கடேவுக்கு வழங்க வேண்டும் என கோரப்பட்டதாகவும் கிரண் கோசாவி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கிரண் கோசாவி ஆர்யன்கானை கைது செய்யும்போது சாட்டியாக இருக்க என்.சி.பியால் அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் மீது ஏற்கெனவே நிலுவையில் இருந்த மோசடி வழக்கில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு மோசடி வழக்கில் புனே நகர காவல்துறை அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது. இதனையடுத்து அவருக்கு எதிராக அக்டோபர் 14ஆம் தேதி லுக்அவுட் சுற்றறிக்கையை போலீஸார் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.