முக்கியச் செய்திகள் இந்தியா

ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி: மும்பை நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் வழக்கில் ஜாமீன் கோரிய ஆர்யன் கானின் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை விசாரணை நீதிமன்றம்.

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 18 நாட்களாக ஆர்யன் கான் சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் ஆர்யன் கான் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது இதில், தீர்ப்பு புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கிய மும்பை நீதிமன்றம், ஜாமீன் கோரிய ஆர்யன் கான் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றத்தில் ஜாமின் மறுக்கப்பட்டதையடுத்து, ஆரியன் கான் உள்ளிட்டோர் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகவுள்ளனர்.தீபாவளி பண்டிகை வருவதால் நவம்பர் முதல் வாரம் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். அதற்குள் ஆர்யன் கானின் மனு விசாரணைக்கு வந்தால்தான், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும். இல்லையெனில் மேலும் சில வாரங்கள் ஆர்யன் கான் சிறையில் இருக்க நேரலாம்.

 

Advertisement:
SHARE

Related posts

வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!

Halley karthi

நாடு முழுவதும் ஒரே நாளில் 42,766 பேருக்கு கொரோனா

Halley karthi

நாளை முதல் தீவிரமடைகிறது ஊரடங்கு!

Jeba Arul Robinson