இன்று பிற்பகல் 3மணிக்கு திகார் சிறைக்கு திரும்புகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்!

ஜாமின் காலம் நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் 3மணிக்கு திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் திரும்புகிறார் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். …

ஜாமின் காலம் நிறைவடைந்த நிலையில் இன்று பிற்பகல் 3மணிக்கு திகார் சிறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் திரும்புகிறார்

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  இதனிடையே, தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  தேர்தல் பரப்புரைக்காக ஜூன் 1  வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.  மேலும் ஜூன் 2-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஜாமீனை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்க கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஜூன் 1ம் தேதியுட கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் முடிவடைய உள்ள நிலையில்,  டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி  மனுத்தாக்கல் செய்தார் .  இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் ஜாமின் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு ஜூன் 1ம் தேதி விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து ஜூன் 2ம் தேதி சரண் அடைவேன் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இன்று மாலை 3மணி அளவில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு திரும்புகிறார்.  இன்று ஜாமின் முடிந்து சிறைக்கு திரும்புவதால் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் கனாட் பிளேஸில் உள்ள அனுமன் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார்.  அதன் பிறகு தனது கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்த பிறகு திகார் செல்வது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.