அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி : அமெரிக்க செனட் குழு தீர்மானம் நிறைவேற்றம்!

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து அமெரிக்க செனட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த…

அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து அமெரிக்க செனட் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து நாடாளுமன்ற செனட் குழு இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. செனட் குழுவினரான, ஜெஃப் மெர்க்லி, பில் ஹேகர்டி, டிம் கெய்ன் மற்றும் கிறிஸ் வான் ஹோலன் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்தினர்.

இந்த தீர்மானம் சீனாவுக்கும், இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாக மெக்மஹோன் கோட்டை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவிற்கு சொந்தமான பல பகுதிகள் சீனாவுக்கு சொந்தமானது என கூறி  ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கக் கொள்கைகளை சீனா செய்து வந்தது. இந்நிலையில், அதற்கு எதிராக அமெரிக்க செனட் குழு இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானமானது முழு வாக்கெடுப்புக்கு அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிய செனட் சபைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

“இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள செனட் குழு, இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா கருதுகிறது என்பதை குறிக்கிறது. அது சீனாவுக்கு சொந்தமானது அல்ல. மேலும், அப்பகுதிக்கு அமெரிக்கா தனது ஆதரவையும் உதவியையும் அளிக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே எண்ணம் கொண்ட சர்வதேச கூட்டாளிகள்.” என அமெரிக்க நாடாளுமன்ற நிர்வாக ஆணையத்தின் இணைத் தலைவர் மற்றும் செனட் உறுப்பினர் மெர்க்லி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.