நாளை காலை 10.30 மணிக்கு அறுமுகசாமி ஆணையம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் முதலமைச்சரை நேரில் சந்தித்து அறிக்கையை வழங்குகிறது.
நீதியரசர் ஆறுமுகசாமி தனது அறிக்கையை காலை 10.30 மணிக்கு முதலமைச்சரை சந்தித்து வழங்குகிறார்.
முன்னதாக, ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்தது.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவர்களும் விளக்கம் அளித்தார். சசிகலா தரப்பும் தன்னுடைய விசாரணையை நிறைவு செய்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்தன. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.








