அருள் நிதியின் “ராம்போ” பட டிரெய்லர் வெளியீடு..!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம்போ’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிமான்டி காலனி 2’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் அருள்நிதி  “ராம்போ” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கொம்பன் பட இயக்குநர் முத்தையாவின் இயக்கியுள்ளார். மேலும்  இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், அபிராமி, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவான ராம்போ திரைப்படம் அக். 10 ஆம் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.