பாண்டியர்களின் வருகை; புல்லரிக்க வைக்கும் யாத்திசை – விமர்சனம்

வரலாற்று கதைகள புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எதுன்னா திரைப்பட காட்சிகள் தான். புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இதலாம் அந்த அந்த கால கட்டத்துக்கு ஏற்ற…

வரலாற்று கதைகள புத்தகங்கள படிச்சிருப்போம். ஆனா இதலாம் தாண்டி மனசுல நிக்கிறது எதுன்னா திரைப்பட காட்சிகள் தான். புராணக்கதைகள், வரலாற்று கதைகள், சுதந்திர போராட்ட கதைகள் இதலாம் அந்த அந்த கால கட்டத்துக்கு ஏற்ற மாதிரியான காட்சிகள மையப்படுத்தி மக்கள் மனசுல நச்சுன்னு இடம்பிடிக்கிறது. இப்படியாக சமீபத்துல வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்களுக்கு ரொம்பவே பிடிச்சிச்சுன்னே சொல்லலாம்.

இன்னும் சொல்லனுன்னா த்ரிஷா பெயர் குந்தவையாகவும், ஐஷ்வர்யா ராய்யோட பெயர் நந்தினின்னும், விக்ரமோட பெயர் கரிகால சோழன்னும் மக்கள் மனசுல
பதிவாகியிருக்கு. அந்த அளவுக்கு வரவேற்பை பெற்ற படம், வசூல் ரீதியாகவும் அள்ளி குவிச்சுச்சு. ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் படங்கள்ல
பாத்தீங்கன்னா பாண்டியர்கள ஒரு பகுதியா காமிப்பாங்க, அதுவும் வில்லனா தான் காட்டுவாங்க.

ஆனால் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள யாத்திசை படத்துல பாத்தீங்கன்னா பாண்டியர்கள மையமா வெச்சு எடுத்திருக்காங்க. சோழர்களின் வரலாற குறிக்கும் ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் படங்கள்-ல உள்ள நடிகர்கள், நடிகைகள் எல்லாம் மிகப் பெரிய பிரபலங்கள் தான். ஆனா இந்த யாத்திசை படத்துல எல்லாமே அறிமுக நட்சத்திரங்கள் தான். இன்னும் சொல்லனுன்னா இந்த படத்தோட இயக்குநர் தரணி ராஜசேந்திரன்னும் புதுசு தான். சரி கதைக்கு வருவோம்.

யாத்திசை என்றால் தென்திசை என்று பொருள். 7ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் தென்திசையான பாண்டிய நாட்டுக்கு எதிரா போராடிய எயினர் எனும்
தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’. இந்த கதையில் உள்ள பெயர்கள், யாத்திசை என்ற கதையின் தலைப்பை மட்டும் வைத்து கொண்டு தனது
கற்பனையை செதுக்கியிருக்கிறார் டைரக்டர் தரணி ராசேந்திரன். படத்தின் கதையை பொறுத்தமட்டில் ரணதீரன் என்ற பாண்டிய மன்னன் தனது ஆட்சிக்காலத்துல
எயினர் சமூக மக்கள பாலை நிலத்துக்கு போகச் சொல்லி உத்தரவு போடுறாரு.

இதனால் எயினர் சமூக மக்கள் கடுமையான கோபத்துல இருக்காங்க. எயினர்
சமூகத்தின் தலைவன் கொதி, பாண்டியர்கள் மீது போர்தொடுக்க முடிவு செய்றாரு அதற்காக சேரர்கள், சோழர்கள், பல்லவர்களுக்கு அழைப்பு விடுகிறாரு.
இதற்கிடையில தேவரடியார்கள காட்டுறாங்க அவுங்கள பாண்டியர்கள் ஆளும் பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு போக சொல்லுறாங்க எயினர்கள். இந்த
தேவரடியார்கள் எங்கே சென்றார்கள், பாண்டியர்களுக்கும், எயினர்களுக்கும் போர் நடந்ததா என்பது தான் படத்தின் மீதி கதை.

வரலாற்றுப் படங்களில் மன்னர்களாக வரும் நட்சத்திரங்களைக் காண்பிக்கும் போது ஒரு அரைமணி நேரம் Slow Motion -ல் பயங்கரமான பிஜிஎம் போட்டு Intro கொடுப்பதிலேயே பாதி படத்தை ஓட்டிரு வாங்க. ஆனால் இந்த படத்தில் அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்ல. ரொம்ப Simple-லா காட்டுகிறார்கள். கதைக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். படத்தின் மொழிக்குப் பெரிதும் மெனக்கீடு செய்திருக்கிறார்கள். எயினர்களின் மொழிக்கு 7-ம் நூற்றாண்டு இலக்கியங்களை ஆய்வு செய்து அதைத் தொகுத்து உரையாடலாக மாற்றியிருக்கிறார்கள்.

அந்தக் காட்சிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் சப்டைட்டிலும் போட்டுள்ளார்கள். இப்படி மொழி, உடை, நகைகள் என அந்த காலத்தில் மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று தத்ரூபமாகக் காட்டி இருக்கிறார்கள். இதனால் திரையரங்கில் பார்வையாளர்களை யாத்திசை படம் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு செல்கிறது.

யாத்திசை படத்தில் உள்ள ஒரு சில விசயங்களைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். அந்த விதத்தில் நகைகள், ஆடைகள், ஆயுதம் உள்ளிட்டவை பற்றி சில குறிப்புகளைப்
பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். மேலே குறிப்பிட்ட 3ம் வரலாற்றுக் கதைகளில் பயங்கரமா காமிச்சிருப்பாங்க. ஆனால் இந்த படத்தில் எல்லாமே ரொம்ப எளிமை
அதனால் படத்தை பார்த்துவிட்டு சில கேள்விகளை இயக்குநரிடம் கேட்டோம். பொதுவாக வரலாற்றுக் கதைகள் என்றால் நகைகள் அதிகம் அணிந்திருப்பார்கள் மன்னர்
வகையினர்.

ஆனால் இந்த படத்தில் நகைகள் குறைவு தான் இயக்குநரிடம் கேட்கும்போது நாங்கள் 2 ஆண்டிற்கும் மேல் ஆய்வு செய்தோம், பல அறிஞர்களிடம் கேட்டோம் அதில் கிடைத்த பதில் என்னவென்றால் அந்த கால கட்டத்தில் சரியான ஆடைகள் கிடையாது அதுமட்டுமில்லாமல் வெயிலும் வெளுத்தெடுக்கும் இதில் அவ்வளவு நகைகள் எப்படி அணிந்திருக்க முடியும்-ன்னு தெரியவந்தது அதனால் தான் படத்தில் குறைவான நகைகள்.

அதேபோல ஆயுதங்களைப் பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தின் நிலத்தைப் பொறுத்தே பயன்படுத்தப்பட்டது. பாலை நிலத்து மனிதர்களின் அடிப்படை வேட்டையாடல். வேட்டையாடல் மூலமே அவர்களது தேவைகள் நிறைவேறும். வேட்டையாடிய விலங்குகளின் தோல்கள் ஆடைகளாகவும், எலும்புகள் ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே இந்த திரைப்படத்திலும் அதைப் பின்பற்ற முடிவு செய்கிறோம் என இயக்குநர் பேசியிருந்தார். அதே போல் பாண்டியர்களை எடுத்துக் கொண்டால் வளமானவர்கள்.
உலோகங்களைப் பயன்படுத்துவார்கள். அவர்களது ஆயுதங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

ஆடைகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அந்தக் காலகட்டத்தில் ஆடைகள் கிடையாது என நாங்கள் ஆராய்ச்சி செய்யும் போது தெரியவந்தது. அதனால் நிர்வாணமா காண்பித்தால் சென்சார் பிரச்சினை வருமென்று, வரலாற்றுச் சான்றுகள் படி அப்போது ஆடைகளுக்குப் பதிலாக நகைகளைப் பயன்படுத்தியதை அறிந்தோம். அதனால் நகைகளையே ஆடைகளாக வடிவமைத்தோம் என்று கூறினார் இயக்குநர்.

யாத்திசை படத்தோட ட்ரெய்லர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியான கொஞ்ச நேரத்துலையே Likes-களையும், Comment-களையும் அள்ளி குவித்து, மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்துடைய சிறப்பு திரையிடல் நேற்றைய தினம் காண்பித்தார்கள். எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தவர்கள் படத்தைப் பார்த்து மிரண்டுபோனார்கள். இவ்வளவு குறைவான பட்ஜெட்ல கூட வரலாற்றுப் படங்களை அருமையா எடுக்க முடியுமென நிரூபித்துள்ளார் இயக்குநரும், தயாரிப்பாளரும்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் தமிழ் இனம், மொழி, மன்னர்கள், போர், அதிகாரம், ஒடுக்குமுறை, சடங்குகள், பலி-ன்னு பல வரலாற்று விஷயங்களை இலக்கியத் தரத்தோடு நேர்த்தியான Periodic Action திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர். பிரபல நடிகர்கள், நடிகைகள் நடித்தால் தான் வரலாற்றுக் கதாபாத்திரங்கள் மனதில் நிற்கும் என்ற நிலைமையை மாற்றி புதுமுகங்களாலும் பல அடிகள் பய முடியும்-ன்னு ஆணித்தரமா இயக்குநரும், தயாரிப்பாளரும் நிரூபித்துள்ளார். மக்களே உங்கள புல்லரிக்க வைச்ச இந்த ட்ரெய்லர். நாளை திரையரங்கில் உங்களுக்கு செம்ம விருந்து அளிக்க போகிறது. மொத்தத்தில் வீக் எண்டுக்கு கிடச்ச பெஸ்ட்டான்ன படம்-ன்னு சொல்லலாம் நம்பி தியேட்டர்ல போய் பாருங்கள்.

-சுஷ்மா சுரேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.