36.1 C
Chennai
May 30, 2024
இந்தியா சினிமா

மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் அர்ஜுன் தாஸ்!

மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார். 

இயக்குநர் வசந்தபாலன் வெயில்,  அங்காடி தெரு உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர்.  இவர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘அநீதி’.  இந்த படத்தில் ‘கைதி’,  ‘மாஸ்டர்’ ,  விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் மற்றும் வசந்தபாலனின் அர்பன் பாய்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அநீதி படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். இவர்களுடன் வனிதா விஜயகுமார்,  நடிகர் அர்ஜுன் சிதம்பரம்,  சுரேஷ்சக்ரவர்த்தி, அறந்தாங்கி நிஷா,  காளி வெங்கட்,  டி.சிவா உள்ளிட்டோர் நடித்தனர்.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி படம் வெளியாகி விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது.  இதனைத் தொடர்ந்து இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘ரசவாதி’ படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்.  இந்த நிலையில்,  மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார்.  இப்படத்தை இயக்குநர் அஹமது கபீர் இயக்குகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading