‘தளபதி 68’ படத்தின் பூஜை தொடர்பான வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியானது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். யுவன் கடைசியாக விஜய்யின் ‘புதிய கீதை’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் விஜய் – யுவன் கூட்டணி அமைந்துள்ளதால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள் : இன்று வெளியாகிறது ‘ஜப்பான்’ படத்தின் முதல் சிங்கிள் – படக்குழு அறிவிப்பு..!
அண்மையில் ‘தளபதி 68’ படத்தின் பூஜை நடைபெற்று முடிந்தது. படப்பிடிப்பும் தொடங்கியது. இந்நிலையில் படத்தின் பூஜை தொடர்பான வீடியோவை நாளை மதியம் 12.05 மணிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நாளை வெளியாக உள்ள வீடியோ மூலம் படத்தில் நடிக்கும் திரைநட்சத்திரங்களைப் பற்றி ரசிகர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.







