கட்சித் தொடங்கினால் விஜய்-க்கு வாக்களிப்பீர்களா என போஸ்டருன் சுற்றிய ரசிகர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது சரிதானா என கேட்டு இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம் என மாணவர்கள், பெற்றோரிடம் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த வீரேஷ், புதியவன் ஆகிய
ரசிகர்கள், விஜய் பிறந்தநாள் அன்று சாலையோர மூதாட்டிகள், மனநலம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணளித்தனர்.
காரில் ஏற்றி சென்று வீட்டில் இறக்கி விட்டனர். மேலும் மூதாட்டிக்கு உணவு வழங்கிய ரசிகர்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போடுவீங்களா என்று கேட்டனர். அதற்கு கண்டிப்பாக ஓட்டுப்போடுவேன் என அவர் தெரிவித்தார்.
மற்றொரு மூதாட்டி கூறுகையில், ஓட்டுப்போட பணம் வாங்கக்கூடாது என்று சொன்ன தம்பி தானே, டிவியில் பார்த்தேன், அவருக்கு கண்டிப்பா ஓட்டு போடுவேன் என தெரிவித்தார்.
ஆனால், இந்த வீடியோவில் விஜய் போஸ்டரை பிடித்து கொண்டு உணவு வழங்குவது சரிதானா என்றும், விஜய் ரசிகர்கள் இவ்வாறு விளம்பரம் தேடுவது சரிதானா என்றும் இணையத்தில் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.







