மகளின் திருமண வரவேற்பில் இசைவிருந்து படைத்த ஏ.ஆர்.ரகுமான்

கவரப்பேட்டை அருகில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர். திருவள்ளூர் மாவட்டம், கவரைபேட்டை அருகே உள்ள ARR ஃபிலிம் சிட்டியில்…

கவரப்பேட்டை அருகில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், கவரைபேட்டை அருகே உள்ள ARR ஃபிலிம் சிட்டியில் இசை
அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதிஜா ரகுமான், ரியாசுதீன் சேக் முகமது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசைக் கச்சேரியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கதீஜா ஊதா நிற லெஹங்கா அணிந்திருந்தார். மணமகன் ரியாஸ்தீன் கருப்பு நிற கோட், பெளட்டி அணிந்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் நீல நிற ஜாக்கெட்டுடன் கூடிய குர்தா-பைஜாமா அணிந்திருந்தார். மகன் அமீன் கருப்பு நிற ஷெர்வாணி அணிந்திருந்தார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், இசை பயிலும் மாணவர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  முதல்வருடன் அமைச்சர் சாமு நாசர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற டிஜே கோவிந்தராஜன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஹனி சிங் மற்றும் சோனு நிகாம் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஹனி சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணமக்களுடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ஆசிர்வதிக்கப்பட்ட மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஏ.ஆர்.ரகுமான் சார், அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் திருமண வரவேற்பில் பங்கேற்று மாலை நேர இசைக் கச்சேரி வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த இடம் நீல நிற மற்றும் பீச் நிற ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், கதீஜாவும் தனது திருமண வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், எனது முன்னோர் மற்றும் குடும்பத்தினரின் பிரார்த்தனை, ஆசிர்வாதத்துடன் என்னுடைய திருமணம் நடைபெற்றுள்ளது. எனது குடும்பம் மற்றும் என்னுடைய அன்பு குழுவினரின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை என பதிவிட்டிருந்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.