பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்: ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம்!

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகளில்…

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இதனை நிரப்புவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பாக அளுநருக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றின்னால் போதும் என்றும், உறுப்பினரை புதிதாக சேர்க்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.