தளபதி – 68 படத்தில் அபர்ணா தாஸ்?

தளபதி விஜய் – 68 படத்தில் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத்,…

தளபதி விஜய் – 68 படத்தில் அபர்ணா தாஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.

இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது ‘டாடா படத்தின் மூலம் பிரமலடைந்த அபர்ணா தாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.