அனுஷ்காவின் ’மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகை அனுஷ்காவின் ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய்,…

நடிகை அனுஷ்காவின் ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்களுடன் அனுஷ்கா ஷெட்டி ஜோடியாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டில் வெளியான ‘அருந்ததி’ எனும் படம் இவரை திரை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி சென்றது. இந்த நிலையில், பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி படம் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தது.

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ”மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.  மேலும் ஜெய சுதா, முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.