அனுஷ்காவின் ‘காதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘Ghaati’ திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகை அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர்…

அனுஷ்காவின் ‘காதி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் ‘Ghaati’ திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. காதல் கதையான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான “காதி” என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்.

நடிகை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு காதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டனர். இந்நிலையில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.