அனுஷ்காவின் #Ghaati படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானது!

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காதி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. ‘அருந்ததி’ படத்தின் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா…

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘காதி’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

‘அருந்ததி’ படத்தின் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’. தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் ‘காதி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா செட்டி மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

அனுஷ்கா இன்று தன்னுடைய 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை காதி படக்குழுவினர் அனுஷ்கா ஷெட்டியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.