மூவாயிரம் ரூபாய்க்கு வருடாந்திர FASTag பாஸ் அறிமுகம் – மத்திய அரசு அறிவிப்பு!

மூவாயிரம் ரூபாய்க்கு வருடாந்திர FASTag பாஸை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மூவாயிர ரூபாய் விலையில், 60 கிலோ மீட்டர் வரம்பிற்குள் 200 பயணங்களை மேற்கொள்ளும் வகையில் ஸ்பாஸ்டேக் வருடாந்திர பாஸை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் தனது எக்ஸ் பதிவில், “இந்த வருடாந்திர பாஸ் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை மேற்கொள்ள உதவும். மேலும் இதை செயல்படுத்த மற்றும் புதுப்பிக்க  NHAI (இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் சங்கம்) மற்றும் MoRTH (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகலாம்.

இது 60 கிலோ மீட்டர் வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்டகால கவலைகளை நிவர்த்தி செய்கிறது. மேலும் சுங்கக் கட்டண பரிவர்த்தணையை எளிதாக்குகிறது. மில்லியன் கணக்காணோரின் காத்திருப்பு நேரங்களை குறைக்கும். அத்துடன் பயணத்தை சுமூகமாக்கும். நெடுஞ்சாலைப் பயணத்தை தடையற்றதாகவும், பயணிகளுக்கு சிக்கனமானதாகவும் மாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 15 முதல் வழங்கப்படவுள்ள இந்த பாஸ் மூலம் வருடத்திற்கு 200 பயணங்கள் வரை மேற்கொள்ள முடியும். ரூ.3,000க்கு ஒருமுறை FASTag ரீசார்ஜ் செய்தால், தனியார் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில விரைவுச் சாலைகளில் ஒரு வருடத்திற்கு கூடுதல் சுங்கக் கட்டணங்கள் இல்லாமல் பயணிக்க முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.