நாடு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், அனைத்து வசதிகளையும் கொண்டதாக தரம் உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கான அறிவிப்புகள்
- தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி அனைத்து வசதிகளையும் கொண்டதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- மாணவர்களை ராணுவத்தில் சேர தயார்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதிதாக 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும்.
- லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான லே-யில் மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படும்
- மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படும்
- அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் 35 ஆயிரத்து 219 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்
- ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10ம் வகுப்புக்குப் பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.







