முக்கியச் செய்திகள்சினிமா

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரைலர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர்,  தயாரிப்பாளர்,  பாடகர்,  இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.  சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரோமியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  இந்த படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனையடுத்து,  விஜய் ஆண்டனி நடித்துள்ள  புதிய படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் அறிவிப்பு வெளியானது.  விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சத்யராஜ்,  டாலி தனஞ்சயா,  முரளி ஷர்மா,  மேகா ஆகாஷ்,  தலைவாசல் விஜய்,  சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விஜய் ஆண்டனி பாடல்களுக்கு மட்டும் இசை அமைக்க,  அச்சு ராஜாமணி பின்னணி இசையை அமைத்துள்ளார்.

இப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர்.  இத்திரைப்படத்தின் முதல் பாடலான `தீரா மழை’ பாடலும்,  2வது பாடலான “தேடியே போறேன்” பாடலும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.  சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது.  இந்த நிலையில்,  ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரைலர் வரும் 29ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

”குழந்தையின் கை அகற்றம் : ரத்த ஓட்டம் குறைவானதால்தான் ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது “ அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!

Web Editor

தோல்வியில் இருந்து மீளப்போவது யார்? – பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

Jeni

ராக்கெட்ரி – நம்பி விளைவு; ஜூலை 26ம் தேதி ஓடிடியில் ரிலீஸ்!

Arivazhagan Chinnasamy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading