நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் இயக்குனரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்த அண்ணாமலை

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, சமீபகாலமாக ஏற்பட்ட நிகழ்வுகளை அடுத்து, அந்நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரி அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள்…

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, சமீபகாலமாக ஏற்பட்ட நிகழ்வுகளை அடுத்து, அந்நிறுவனத்தின் தனி இயக்குனர் சுப்ரதா சவுத்ரி அவர்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் மற்றும் தமிழக பாஜக தொண்டர்கள் கோரிக்கைகளை அவரிடத்தில் எடுத்துச் சொன்னேன். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் செயல்படுத்த வேண்டும் என்றும், உள்ளூர் இளைஞர்களை குறைந்தபட்சம் மேற்பார்வையாளர் வேலை வரையிலுமாவது நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தேன்.

மேலும் நிலம் கொடுத்தவர்களுக்கு ‘வீட்டுக்கு ஒரு வேலை’ என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. 1990 முதல் வெவ்வேறு காலகட்டங்களில் நிலம் கொடுத்த பொதுமக்கள் வீட்டில், ஒருவருக்கு வேலை என்ற நியாயமான கோரிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். அது மட்டுமல்லாது, புதிதாக நிலம் கையகப்படுத்தும் போது, மத்திய அரசு கொடுத்துள்ள வழிமுறைப்படி, நில உரிமையாளர்களுக்கான உரிய இழப்பீடுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். நம் கோரிக்கைகள் அனைத்தையும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கும், மற்ற உயர் அதிகாரிகளுக்கும் எடுத்துச் சொல்வதாக நிறுவனத்தின் தனி இயக்குனர்  சுப்ரதா சவுத்ரி அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

அண்மைச் செய்தி :ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ; தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை தாக்கல்..!

நெடுங்காலமாக, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து வரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தொடர்ந்து தமிழக மக்களுக்கான தனது சேவையைத் தொடரும் என்றும், நம் கோரிக்கைகள் அனைத்திற்கும், மகிழ்ச்சியளிக்கும் வகையில் பதிலளிக்கும் என்றும் நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.