தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் பேரறிஞர் அண்ணா.. – #TVKVijay

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா என தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளான செப். 15-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு கொண்டாடும்…

தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்தவர் அண்ணா என தவெக தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளான செப். 15-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு கொண்டாடும் விதமாக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று 116-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம், திருவுருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அண்ணாவின் நினைவுகளையும், தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டையும் நினைவுப்படுத்தும் வகையில், பலரும் வாழ்த்துகளை தங்களது சமூக வலைதளச் பதிவு வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளதாவது..

” சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கியது. ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரைத் ‘தமிழ்நாடு’ என மாற்றியது, தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய பணிகளை என்றென்றும் போற்றி மகிழ்வோம்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.