மீண்டும் ‘காப்பி கேட்’ சர்ச்சையில் சிக்கிய அனிருத்!… லியோ பாடலுக்கும் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ தொடருக்கும் என்ன சம்பந்தம்?

‘லியோ’ படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தரின்  ” Ordinary Person’‘ பாடல்  ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ சீரிஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல்கள் இணைய தளங்களில் சாதனைகள் படைத்துகொண்டிருக்கும் அதேவேளையில் காப்பி…

‘லியோ’ படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தரின்  ” Ordinary Person’‘ பாடல்  ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ சீரிஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்றைய தேதியில் தென்னக அளவில் எல்லோராலும் தேடப்படும் இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் அவ்வப்போது பாடல்களை காப்பியடித்து சர்ச்சைகளில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், இவருடைய இசையில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான  ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது ஓடிக்கொண்டிருக்கிறது.  இப்படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் ரூ 400 கோடி வசூலித்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.

படம் வெளியான பிறகு, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிகவும் பாராட்டப்பட்டது.  அக்டோபர் 23 அன்று,  படக்குழு  ” Ordinary Person’ பாடலை யூடியூப்பில் வெளியிடப்பட்டனர்.

அது வெளியான உடனேயே, ஒரு பிரிவினர் இது ஓட்னிக்கா மற்றும் டியூக் லூக்கின் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ ‘i’m not outsider’ டிராக்கிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினர். அதனை கவனித்த ஒட்னிகா, படத்தில் யாரும் அனுமதியின்றி இந்த பயன்படுத்தியுள்ளார்களா?  தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது” எனப் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ” Ordinary Person’‘  பாடல் இதோ:

 

பீக்கி பிளைண்டர்ஸ் டிராக் இதோ:

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.