நிர்வாணமாக நடிக்க ஆண்ட்ரியா கட்டாயப்படுத்தப்பட்டாரா?

பிசாசு 2-வில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன் என்னை கட்டாயப்படுத்துனாங்க! பரபரப்பை கிளப்பிய ஆண்ட்ரியா எனும் செய்திகள் கடந்த சில தினங்களாக இணையம் முழுவதும் சுற்றி வருகிறது. சரி எங்கே அப்படி கூறினார் என்று கடுமையாக…

பிசாசு 2-வில் நிர்வாணமாக நடிக்க மறுத்தேன் என்னை கட்டாயப்படுத்துனாங்க! பரபரப்பை கிளப்பிய ஆண்ட்ரியா எனும் செய்திகள் கடந்த சில தினங்களாக இணையம் முழுவதும் சுற்றி வருகிறது. சரி எங்கே அப்படி கூறினார் என்று கடுமையாக அலசியும்
அவர் அப்படி குற்றம்சாட்டியதாக எந்த பேட்டியும் கண்ணில் படவில்லை. சமீபகமாக அவர் கொடுத்த பேட்டிகளில் கூட பிசாசு-2 படத்தை பற்றியும், மிஷ்கின் பற்றியும் உயர்வாகவே பேசியுள்ளார். ‘எனக்கும் மிஷ்கினுக்கும் ஷுட்டிங்ல சண்டை வரும், ஆனா அது படம் சார்த்து ஆக்கப்பூர்வமாதான் இருக்கும். எங்கிட்ட ஒரு காட்சிய சொல்றப்போ, அந்த கதாப்பாத்திரமா நான் ஏன் அதை பண்ணனும்னு எனக்குள்ள ஒரு கேள்வி வரும். சரியான காரணத்தை சொன்னா நான் கன்வைன்ஸ் ஆகிடுவேன்’ என்றே ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

இப்போது மிஷ்கினுக்கு வருவோம்.. கடந்த ஆண்டிலேயே பிசாசு-2 படத்தை பற்றி சில பேட்டிகளில் பேசியுள்ள மிஷ்கின், “இந்த படத்தோட கதைய ஆண்ட்ரியாக்கிட்ட சொன்னேன். கொஞ்சம் யோசிச்சவங்க என்னோட கதாப்பாத்திரம் ரொம்ப கிளாமரா இருக்கே!..அப்படின்னா நீங்க எனக்கு சம்பளம் அதிகமா கொடுக்கனும்னு கேட்டாங்க. எனக்கு அவங்க சொன்னது நியாயமா பட்டுச்சி. தாராளமா வாங்கிக்கோங்க தாயி என்று சொல்லிட்டேன்” என்று அவருக்கே உள்ள பாணியில் தெரிவித்தார். படம் தொடங்கும் முன்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நிர்வாணக்காட்சிகள் இருக்கும் என்று ஆண்ட்ரியாவிடம் சொல்லப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பேட்டியில், “இந்த படத்தில் erotisim(பாலியல் ஆசை தூண்டுதல்) வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கும். ஆனால் நேரடியாக உடல் சார்ந்து நான் காட்டவில்லை. நிர்வாண காட்சிகளை காட்டமலேயே பார்ப்பவர்களின் மனதில் Erotic உணர்வுகள் தோன்றுவது போல் தான் அந்த காட்சிகளை கையாண்டிருக்கிறேன். இந்த படத்திற்காக ஆண்ட்ரியாவை வைத்து ஒரு நிர்வாண போட்டோ ஹூட் செய்தோம். அப்போது அந்த காட்சிகளை விவரித்துவிட்டு நான் வெளியே சென்றுவிட்டேன். இதுகுறித்து ஆண்ட்ரியா என்னிடம் கேட்டபோது, ‘இல்லம்மா இன்னும் அந்த காட்சியை வைக்கலாமா வேண்டாமான்னே நான் முடிவு பண்ணலன்னு’ சொல்லிட்டேன். படம் எடுக்க எடுக்க எனக்குள்ள ஒரு மனப்போராட்டம் இருந்தது. எல்லாருமே பெண்ணுடல கலை நயத்தோடு பாக்குறத்தில்ல. வக்கிரத்தோடு பாக்குறவங்களும் நிறைய இருக்காங்க. அந்த வக்கிர பார்வைக்குள்ள நான் ஆண்ட்ரியாவ தள்ளிவிட விரும்பல. அதுனால அந்த காட்சிகளை தவிர்த்துட்டேன். ஆனா இந்த படத்துல ஒரு sensational erotism பண்ணிருக்காங்க.கதைக்கு அது ரொம்ப தேவப்பட்டுச்சி” என்று மிஷ்கின் குறிப்பிட்டார்.

இதுவே ஆண்ட்ரியாவை எடுத்துக்கொண்டால், மேடை ஒன்றில் பேசும் போது, ‘கதாநாயகிகள் சினிமாவில் ஹீரோக்களை சார்ந்திருக்கும் நிலையே தொடர்கிறது;
இது மாறவேண்டும். பெண்களை மையப்படுத்திய கதைகள் நிறைய உருவாக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். மேலும், ‘ கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகக் கூட நடிக்க தயார், ஆனால் பெண்ணுடலை வெறும் கவர்ச்சிக்கான நுகர்வுப்பொருளாக பாவிக்கும் வகையில் கதாப்பாத்திரங்கள் இருந்தால் அதில் நடிக்கமாட்டேன். கிளாமர் என்ற பெயரில் இடையை ஆட்டி குத்தாட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனை வைத்து பார்க்கும் போது, மிஷ்கின் பிசாசு தொடர்பான கதையை விவரிக்கும்போதே நிர்வாணக்காட்சிகள் தொடர்பாக தெரிவித்திருக்கிறார் என்றும்,
ஆண்ட்ரியாவுக்கு சிறிது தயக்கம் இருந்திக்கலாம். திரைக்கதை தேவை எனும் சூழலில் அவரே தான் மனமுவந்து சம்மதித்திருக்கலாம். ஆனால், கட்டாயப்படுத்தினார்கள், வற்புறுத்தினார் என்பதெல்லாம் வதந்திகளாகத்தான் இருக்கமுடியும். உண்மையில் அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அதை ஆண்ட்ரியாதான் வெளிப்படுத்த வேண்டும் என்று சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற Sensitive ஆன செய்திகளை கையாளும்போது ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும், போகிற போக்கில் அவர்களை அறியாமலேயே ஒரு சிறந்த கலைஞன் மீது அவதூறுகளை வீசிச்செல்கின்றனர் எனவும் ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் பிசாசு படத்தின் டீஸர் காட்சிகள் வெளியாகியுள்ளது. படத்தில் 10 நிமிடக்காட்சிகளில் தான் விஜய் சேதுபதி வருவார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், டீஸரில் ஒரு ஷாட்டில் மட்டும் வந்து கண்ணை காட்டி சென்றுள்ளார்.

டீஸர் வெளியாவதற்கு முன்பே குழந்தைகளை பார்க்க விடாதீர்கள் என்றெல்லம் படக்குழுவினர் disclaimer-கள் போட்டார்கள். ஆனால் டீஸரில் அந்தளவு எந்த horror காட்சிகளும் பெரிதாக இடம் பெறவில்லை.

டீஸரின் இரண்டாவது frame-லேயே ஒரு பெண்ணின் உருவம் கோரமான நிலையில் நிர்வாணமாக நிற்பது போல் அமைந்திருந்தது. இதைத்தாண்டி Erotism சார்ந்த எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை ரிவீல் ஆகலாம் என்பதால் டீஸரில் அதை தவிர்த்திருக்கலாம் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.