ஆந்திர மாநிலம் , புட்டபர்த்தியில் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி தொகுதின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆளும் ஒய் எஸ் ஆர் கட்சியை சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டி. இந்நிலையில் இவர் மீது தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளர் நாரா லோகேஷ் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ரெட்டி தன் மீது சுமத்தப்படுக்கின்ற ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், இதை நிருபித்து காட்ட புட்டபத்தியில் உள்ள சத்தியம்மா கோவிலில் சத்தியம் செய்ய தயார் என்று கூறி வந்தார். இதை போல் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாரா லோகேஷ் நான் ஊழல் செய்தது உண்மை என்று சத்தியம் செய்ய தயாரா என ஸ்ரீதர் ரெட்டி சவால் விடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய சாவலை நிறைவேற்றுவதற்காக ஶ்ரீதர் ரெட்டி கோயிலுக்கு வந்தார். இதை பார்த்த தெலுங்கு தேச கட்சியினர் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினர் காரின் மீது கற்கள், செருப்பு போன்றவை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இ்ரு கட்சியினரும் மாறி, மாறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டினர். மேலும் தெலுங்கு தேச கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
—கோ. சிவசங்கரன்







