வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பழங்கால அகல்விளக்கு கண்டெடுப்பு!

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானை, கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு ஆகிய பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே…

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானை, கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு ஆகிய பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட உச்சிமேடு பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதற்காக 8 குழிகள் தோண்டப்பட்டன.

இதுவரை தங்க அணிகலன்கள், தங்கப் பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைபிடிப்பான் கருவி, காதணி, எடைக் கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானைத் தந்தத்தால் ஆன பகடை என 2 ஆயிரத்துக்கும் அதிகமான பழைமையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில், சுடுமண் பானை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கூம்பு வடிவ விளக்கு, வட்ட வடிவ அகல் விளக்கு ஆகியவை சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

இந்தப் பகுதியில் வசித்த நமது மூதாதையா்கள் மண்பாண்டக் கூடம் அமைத்து கலைநயம் மிக்க பொருள்களைத் தயாரித்திருக்கலாம் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.