பொறுமையாக இருந்தால் வெற்றி உறுதி – கரடியின் வீடியோவை வெளியிட்டு ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ வைரல்!

ஆனந்த் மஹிந்திரா ஒரு கரடியின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு தியானம் மற்றும் பொறுமை பற்றி கூறியுள்ளார். எதிலும் கவனம் செலுத்துவது பலருக்கு சவாலாக இருக்கும். இந்த சவாலை நீங்கள் சமாளிக்க விரும்பினால், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா…

ஆனந்த் மஹிந்திரா ஒரு கரடியின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு தியானம் மற்றும் பொறுமை பற்றி கூறியுள்ளார்.

எதிலும் கவனம் செலுத்துவது பலருக்கு சவாலாக இருக்கும். இந்த சவாலை நீங்கள் சமாளிக்க விரும்பினால், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஒரு ஊக்கமளிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஒரு கரடி ஆற்றில் மீனைப் பிடிக்கக் காத்திருப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.

“தியானம், பொறுமை, வெற்றிகரமான செயலுக்கு வழிவகுக்கும்” என்று ஆனந்த் மஹிந்திரா வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஒரு கரடி ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கிறது. அது பொறுமையாகக் காத்திருக்கிறது. பின் கரடி விரைவாகத் தன் கைகளை தண்ணீரில் அடித்து ஒரு மீனைப் பிடிக்கிறது.

https://twitter.com/anandmahindra/status/1650709102715338752?s=20

இந்த வீடியோ முதலில் டெரிஃபைங் நேச்சர் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. இந்த பதிவை ஆனந்த் மஹிந்திரா மறுபகிர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.