டிராக்டர்களில் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் – வைரல் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா

கடார் 2 திரைப்படம் பார்க்க டிராக்டரில்  வந்த ரசிகர்களின் வைரல் வீடியோவை பகிர்ந்த மஹிந்த்ரா குழும நிறுவனர் ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்துள்ளார். கடார் 2 திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியில் வெளியானது. பிரபல…

கடார் 2 திரைப்படம் பார்க்க டிராக்டரில்  வந்த ரசிகர்களின் வைரல் வீடியோவை பகிர்ந்த மஹிந்த்ரா குழும நிறுவனர் ஆனந்த் மகிந்த்ரா பகிர்ந்துள்ளார்.

கடார் 2 திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியில் வெளியானது. பிரபல பாலிவுட் நடிகரான சன்னி தியோல்.., நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தில் நடித்த அமீஷா படேல் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்து முதலாவது வாரத்தை கடந்து வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சினிமா ரசிகர்கள் கடார் 2 திரைப்படத்தை பார்ப்பதற்கு பல டிராக்டர்கள் அணிவகுக்க திரையரங்கத்திற்கு வந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பலராலும் வேகமாக பரவி வருகிறது.

கடார் 2 படத்தில் கதையின் நாயகனான சன்னி தியோல் டிராக்டர் ஓட்டுநராக நடித்துள்ளார். 1947ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காலகட்டத்தை மையப்படுத்தி இந்த படம் இயக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடார் 1 வெளியான நிலையில் அதன் இரண்டாம பாகமான கடார் 2 வெளியாகியுள்ளது.

https://twitter.com/anandmahindra/status/1690666494978658306

டிராக்டர்களில் அணிவகுத்து திரையரங்கத்திற்கு வந்த ரசிகர்களின் வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்வீட்டில் “ கடார் 2 படம் பார்க்க டிராக்டர்களில் வந்த மக்கள். இந்த வீடியோவை பார்த்து நான் ஏன் மகிழ்ச்சியடைகிறேன் என்பதை யூகித்தால் அவர்களுக்கு எந்த பரிசும் இல்லை “ என தெரிவித்துள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.