ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்ட திருமணம் : காதல் முதல் கல்யாணம் வரை!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் காதல் முதல் கல்யாணம் வரை உள்ள நிகழ்வுகள் இந்த தொகுப்பில் காணலாம். ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விழா இந்தியா மட்டுமின்றி இன்று உலகம்…

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் காதல் முதல் கல்யாணம் வரை உள்ள நிகழ்வுகள் இந்த தொகுப்பில் காணலாம்.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விழா இந்தியா மட்டுமின்றி இன்று உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரம்மாண்ட முறையில் அதிக பொருட்செலவிலும் நடத்தப்படுகிறது.

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் காதல் கதை!

மும்பையை சேர்ந்த ராதிகா மெர்ச்சன்ட் மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார்.  நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் வென்ற இவர், இந்திய பாரம்பரிய நடனத்திலும் பரிட்சயம் பெற்றவர். இவரும், ஆனந்த் அம்பானியும் 2017ஆம் ஆண்டு நண்பர்கள் மூலம் சந்தித்துக்கொண்டனர். இவர்களுக்கு இடையே நல்ல பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு  ஆனந்த் அம்பானி தனது காதலை ராதிகாவிடம் வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போகும் செய்தி பொதுவெளியிலும் அறிவிக்கப்பட்டது.

ஆனந்த் – ராதிகா நிச்சயதாரத்தம்!

கடந்த 2023 -ம் ஆண்டு டிசம்பர் 29 மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஆனந்த அம்பானி, ராதிகா மெர்சென்ட்டின் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வந்தது அவர்களது வளர்ப்பு நாய். அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற துணியில் தான் நிச்சயதார்த்த மோதிரம் இருந்தது. நாய் மேடைக்கு வந்ததும் அந்த துணியில் இருந்த மோதிரத்தை ஆனந்த அம்பானி வெளியே எடுத்தார். பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது.

நிச்சயதார்த்த விருந்து!

ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்த விருந்து நடைபெற்றது.   மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்த விருந்து நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமணத்திற்கு முந்தைய விருந்து!

2024ம் ஆண்டு மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றது.அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உட்பட வெளிநாட்டு பிரபலங்களும் இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்,திரைப்பிரபலங்கள் என மொத்தம் 1,000 சிறப்புவிருந்தினர்கள் 3 நாட்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

சொகுசு கப்பலில் பேச்சிலர் பார்ட்டி!

ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தின் அடுத்தகட்டமாக, சொகுசு கப்பலில் முக்கிய பிரமுகர்களுக்கு பார்ட்டி நடைபெற்றது. இத்தாலியில் மே மாதம் 29-ம் தேதி கிளம்பிய இந்த சொகுசு கப்பல், ஜூன் 1-ம் தேதியன்று ஸ்விட்சர்லாந்தில் நிறைவு பெற்றது. இந்த சொகுசு கப்பல் பார்ட்டியில் 300 வி.ஐ.பி-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இசை நிகழ்ச்சி!

திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன் ஜாம்நகர் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள், ரிஹானாவின் (Rihanna) தனிப்பட்ட இசை நிகழ்ச்சி மற்றும் பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜின் (Diljit Dosanjh) நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இந்த இசை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

ஹல்தி கொண்டாட்டம்!

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக நடைபெற்ற நிலையில், ஜூலை 8ம் தேதி மாலை ஹல்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஹல்தி கொண்டாட்டத்தில் குடும்பத்தினர் மட்டுமின்றி பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

ஆனந்த் – ராதிகா திருமணம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது. அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.