டீம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தி!… படமாகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு?…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில்,  டீம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தி வருகிறது. 2011 உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை திரைப்படமாக…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில்,  டீம் இந்திய ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான செய்தி வருகிறது.

2011 உலகக் கோப்பையை வெல்வதில் முக்கியப் பங்கு வகித்த யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை படமெடுக்கும் உரிமையை தயாரிப்பாளரும் நடிகருமான அமீர்கான் பெற்றுள்ளார் என்பது சுவாரஸ்யமான செய்தி.

பிலிம்பேரின் கூற்றுப்படி, அமீர்கானின் அடுத்த கட்டம் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையைப் படமாக்குவதாகும். இந்தப் படம் யுவராஜின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கிரிக்கெட் வாழ்க்கையையும் முன்னோக்கி கொண்டு வரும் என கூறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.