ஹாலிவுட் காதலனை கரம் பிடிக்கும் எமி ஜாக்சன்…. லேட்டஸ்ட் அப்டேட்!

ஹாலிவுட் காதலனை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார். தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக…

ஹாலிவுட் காதலனை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழில் மதராச பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0 உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

நீண்ட நாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரைக் காதலித்து கொண்டிருந்த எமி திருமணம் செய்துகொள்ளாமலே ஆண் குழந்தை பெற்றேடுத்தார்.
அதையடுத்து, அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில தனிப்பட்ட பிரச்சினையால் இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், எட்வர்டு என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து வந்தார். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.