மணிப்பூர் செல்கிறது எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு!

எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் குழு ஜூலை 29, 30ஆம் தேதிகளில் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின…

எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் குழு ஜூலை 29, 30ஆம் தேதிகளில் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு வருகின்றனர்.மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடி இன அந்தஸ்து வழங்கப்பட்டால் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீட்டு சலுகை பாதிக்கப்படும் என கூறி வருகின்றனர்.

இது தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது  வன்முறை வெடித்தது. பின்னர் அது பெரிய கலவரமாக மாறியது. சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் 6-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த் எம்பிக்கள் குழு ஜூலை 29, 30ஆம் தேதிகளில் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு, நிபந்தனைகளுடன் பகுதியளவு இணைய சேவைக்கு மணிப்பூர் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மொபைல் போனில் இணைய சேவைக்கான தடை தொடர்கிறது.

மலைப் பகுதிகளில் பரவலாக வாழும் குகி மக்கள் மணிப்பூரில் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் ஸலேன் அவ்கின்’ (Zalen Awgin) என்ற பெயரில் சொந்தமாக செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.