பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஓடிடியில் வெளியான ‘சித்தா’…!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘சித்தா’  திரைப்படம்  ஓடிடியில் வெளியானது. ETAKI ENTERTAINMENT தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இந்த…

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘சித்தா’  திரைப்படம்  ஓடிடியில் வெளியானது.

ETAKI ENTERTAINMENT தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநர் அருண்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரின் இசையில் உருவான இப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  ஃபேமிலி ஆடியன்சை கவர்ந்த இப்படத்திற்கு பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.25 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.  சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகக் கூறப்பட்டது.

ஓடிடியில் ஆயுதபூஜையை முன்னிட்டு ‘சித்தா’ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நவம்பர் 17-ம் தேதி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால்  ஓடிடியில் இந்த படத்தை எதிர்பார்த்த நிலையில் இந்த படம் வெளியாகவில்லை.  அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.  இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘சித்தா’  திரைப்படம்  ஓடிடியில் வெளியானது.  இப்படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.